31 வயதே ஆன பிரபல ஆங்கில பாப் பாடகர் Liam Payne மாடியில் இருந்து கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
முன்பு புகழ்பெற்ற One Direction பேண்டில் பாடகராக இருந்த Liam Payne ARGENTINA தலைநகர் Buenos Aires-ல் உள்ள விடுதி ஒன்றின் 3வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
விடுதியின் வெளியே ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 2ம் தேதி அர்ஜென்டினாவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், திடீரென மரணமடைந்த நிலையில், அவரது இறப்புக்கு போதைப்பொருள் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அவர் மூன்றாம் தளத்து மாடியில் இருந்து அவராய் விழுந்தாரா இல்லை வேறு யாரும் தள்ளிவிட்டனரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இளம் வயதிலே பாப் பாடகர் உயிரிழந்து இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
LIAM PAYNE பாடிய பாடல்களை அவரது ரசிகர்கள் அவர் இறந்த ஹோட்டல் முன் மெழுகுவர்த்தி ஏத்தி அழுதபடி பாடி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வீடியோ இதோ: