தல அஜித் தற்போது வலிமை பட சூட்டிங் முடிந்து ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்து வருகிறார். இவருடைய வலிமை படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். போனி கபூரின் குடும்பத்தில் பணிபுரியும் மூன்று ஊழியர்களுக்கு ஏற்கனவே தொற்று உறுதியாக இருக்கும் நிலையில் தற்போது அஜித்மருத்துவமனைக்கு தன் மனைவி ஷாலினியுடன் முக கவசம் அணிந்த படி சென்று வெளியே வரும் வீடியோ ஒன்று இணையத்தில் உலா வருகின்றது.
இதை மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஊரடங்கு காரணமாக வீட்டில் அனைவரும் இருக்கும் போது ஏன் அஜித் மருத்துவமனைக்கு சென்றார் என்று பலரும் கேள்வி கேட்கின்றனர்.
பொதுவாக அஜீத் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவமனையில் உடல் செக்கப் செய்வது வழக்கமான ஒன்று. இதற்காக அவர் சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. இதோ அந்த வீடியோ