Saturday, May 17, 2025
-- Advertisement--

கும்கி பட நடிகருக்கு திருமணம்..!! மணப்பெண் யார் தெரியுமா.?

தமிழ் சினிமாவின் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான படம் கும்கி. இந்த படத்தை இயக்குனர் பிரபுசாலமன் இயக்கி இருந்தார். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு மக்கள் மத்தியில் கிடைத்தது. இந்த படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவுடன் நகைச்சுவை நடிகராக நடித்தவர் அஸ்வின் . இந்த படம் இவருக்கு அறிமுகம் ஆகும்.

இந்தப் படத்திற்குப் பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் நிறைய பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. தமிழில் ஈட்டி, கணிதன், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற பல படங்களில் இவர் நடித்துள்ளார். அஸ்வின் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் இன் பட அதிபர் ஆன சுவாமிநாதனின் மகனாவார். அஸ்வின் சென்னையை சேர்ந்த ராஜசேகர் என்பவரின் மகளான டாக்டர் வித்யா ஸ்ரீ யுடன் பல வருடமாக காதலில் இருந்துள்ளார். இவர் அமெரிக்காவில் எம்எஸ் பட்டம் பெற்று வந்தவர்.

அஸ்வின் மற்றும் வித்யா ஆகிய இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்ய உள்ளனர். இவர்கள் நிச்சயம் ஏற்கனவே நடைபெற்று விட்டது. இந்நிலையில் வருகிற ஜூன் 24ஆம் தேதி இருவருக்கும் சென்னையிலுள்ள சூளை மேட்டில் அஸ்வின் வீட்டில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த ஜோடிக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles