தமிழில் இயக்குனர் சங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் 5 ஹீரோக்களில் ஒருவராக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். அதனைத் தொடர்ந்து சித்தார்த்துக்கு நிறைய பட வாய்ப்புகள் தமிழில் வந்தன.

ஜெனரஞ்சிதமான முகமும் இவருடைய நடிப்பு திறமையும் மக்களை கவர்ந்தது. தமிழில் இவர் தனக்கென ஒரு முத்திரையை பதித்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார் சித்தார்த்.

அரசியல் சமூக அக்கறை கலந்த ஒரு சில நடிகர்களில் ஒருவர் சித்தார்த், எந்த ஒரு பொது கருத்து சொல்வதில் எந்த தயக்கமும் இன்றி வெளிப்படையாக சொல்லும் மனிதர். திரைப்படத்திற்கு வரும் முன்னரே சித்தாத்திற்கு திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டது என்று செய்திகள் வெளிவந்துள்ளது. பல நடிகைகளுடன் கிசுகிசுக்களில் அடிபடுவார் நடிகர் சித்தார்த்.

ஹிந்தி சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ். தமிழில் காற்று வெளியிடை என்ற படத்தின் மூலம் நல்லதொரு பெயரை பெற்றார். தமிழ் மொழி மட்டுமல்ல அதிதி பிற மொழி படங்களிலும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

இந்நிலையில் நடிகை சித்தார்த்துக்கும் அதிதீராவுக்கும் இடையில் காதல் உள்ளது என அவ்வப்போது செய்திகள் வெளிவந்து உள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் தற்பொழுது எனிமி படத்தில் இடம்பெற்ற மால டும்டும் பாடலுக்கு தனது இன்ஸ்ட்டாவில் சித்தார்த்தும் அதிதி ராவும் இணைந்து ஒரு ஆட்டம் போட்டு உள்ளனர். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.