Friday, May 16, 2025
-- Advertisement--

காக்கி சட்டையில் ஆட்டோ டிரைவர் கெட்டப்பில் மாஸ் லுக்கில் நடிகர் சிம்பு…!!! வைரலாகும் வீடியோ.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. அவர் நடித்த மாநாடு வெற்றி திரைப்படத்திற்கு பிறகு பல படங்களில் நடித்து வருகிறார். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து ஜில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் கோகுல் இயக்கத்தில் உருவாக உள்ள கொரோனா குமாரு என்ற படத்தில் நடிக்கிறார். இந்த பிஸியான நேரத்தில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நடிகர் சிம்பு தொகுத்து வழங்கினார். மேலும் ஹாட்ஸ்டார் ஒளிபரப்பான பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்கினார்.

நடிகர் சிம்பு மாசான லுக்கில் அனைத்து போட்டியாளர்களுடன் கலகலப்பாக பேசி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றார். இந்த நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலே நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மறுநாளே நடிகர் சிம்பு ஆட்டோ டிரைவர் லுக்கில் உள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

முதலில் விளம்பரத்துக்காக எடுக்கப்பட்ட ஷூட்டிங்கில் ஆட்டோ டிரைவராக இருப்பாரோ என சொல்லப்பட்ட நிலையில் வெந்து தணிந்த காடுகள் இறுதிகட்ட படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் என தகவல் கசிந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் போலவே ஆட்டோ டிரைவர் கெட்டப்பில் மாஸாக இருக்கிறார் நடிகர் சிம்பு. மேலும் இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles