பிரபல இளம் நடிகருக்கு கொரானோ வைரஸ் உறுதிசெய்யப்பட்டது…! தனிமையில் வைக்கப்பட்டார்….!
உலகெங்கும் தற்போது கொரானோ வைரஸ் தாக்கிவருகிறது. உலகெங்கும் உள்ள மக்கள் அனைவரும் இதனால் மிகவும் பாதிப்புள்ளாகியுள்ளார். உலகில் உள்ள எல்லா நாட்டிலும் தற்போது இந்நோய் பரவி வருவதால் இந்நோய் தீவிரம் அதிகரித்து கொண்டே வருகிறது.
எல்லா நாடுகளும் இந்நோய் பரவுவதை கட்டுப்படுத்த பல முயற்சிகளை செய்து வருகின்றன. நாட்டு மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே இந்நோயை நாம் கட்டுப்படுத்த முடியும் என அரசு கூறி வரும் நிலையில் நோய் பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகர் Aaron Tveit தற்போது கொரனாவால் பாதிப்புள்ளாகியுள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் உறுதி செய்துள்ளார். கடந்த வாரம் பரிசோதனை செய்யப்பட்ட முடிவுகள் வந்த நிலையில் அதில் பாசிட்டிவ் என இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் கடந்த வாரமே தன்னை தனிமை படுத்தி கொண்டதாகவும், அனைவரும் பத்திரமாக இருங்கள், மேலும் விரைவில் எல்லோரையும் தியேட்டரில் சந்திக்கிறேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
We use cookies to ensure that we give you the best experience on our website. If you continue to use this site we will assume that you are happy with it.Ok