Saturday, May 17, 2025
-- Advertisement--

திருமணமான சில மாதங்களிலேயே 60வயது நடிகருக்கு ஜோடியாக மாறிய அமலா பால்..!!

தமிழ்சினிமாவில் சர்ச்சைக்குரிய படமான சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலா பால். இந்த படம் இவருக்கு பல எதிர்ப்புகளை பெற்றுத்தந்த பிறகு மைனா என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார் அமலாபால்.

இந்த படத்திற்கு பிறகு இவருக்கு பல தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. தொடர்ந்து விஜய், விக்ரம், தனுஷ், விஷால் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இந்நிலையில் இவர் நடித்த படங்களில் தெய்வத்திருமகள், தலைவா, காதலில் சொதப்புவது எப்படி போன்ற படங்கள் இவர் நடிப்பு பெரும்பாலும் பேசப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இவ்வாறு இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் சில மாதங்களிலேயே மனக்கசப்பு காரணமாக விவகாரத்தில் முடிவு பெற்றது. அதன் பிறகு பல படங்களில் நடித்து வந்த அமலா பால் சமீபத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய படமான ஆடை படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

தமிழ் மொழி மட்டுமல்லாது மற்ற மொழி படங்களிலும் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவர் தெலுங்கில் ஹீரோவாக உள்ள பாலையாவுடன் ஜோடி சேர்ந்து நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவருக்கு வயது 60 என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles