அம்மா செண்டிமெண்ட் படங்களுக்கும், பாடல்களுக்கும் தமிழ் சினிமாவில் எப்போதுமே தனி ஒரு இடம் உண்டு. அந்த காலம் முதல் இந்த காலம் வரை அம்மா செண்டிமெண்ட் படங்கள் வெற்றியை மட்டுமே பெற்றுள்ளன. அந்த வகையில் சில வருடங்களுக்கு முன் வெளியான படம் பிச்சைக்காரன்.

விஜய் ஆண்டனி சுக்கிரன் என்ற படத்தில் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பல படங்களில் பல ஹிட் பாடல்களை இசையின் மூலம் கொடுத்துள்ளார் விஜய் ஆண்டனி. ஆனால் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் ஹீரோவாக களம் இறங்கினர். இவர் நடித்த அனைத்து படங்களும் மக்கள் மனதில் நல்ல வரவேற்பு பெற்றன.

அந்த வகையில் அம்மாவின் பாசத்திற்காக அம்மாவின் உடல்நிலை சரியாக வேண்டும் என்பதற்காக தன் வாழ்க்கையே அர்ப்பணித்த கதையில் நடித்திருந்தார் நடிகர் விஜய்ஆண்டனி. அந்த படம் தான் பிச்சைக்காரன் இதில் மிகப் பெரிய தொழிலதிபராக உள்ள அம்மா ஒரு சில காரணங்களால் உடல்நிலை சரியில்லாமல் போய்விடுகிறார்.

அதற்கு எந்த சிகிச்சையும் பலன் அளிக்கவில்லை ஒரு சாமியாரிடம் கேட்ட பொழுது நீ பிச்சைக்காரனாக ஒரு வருடம் வாழ வேண்டும் அப்போதுதான் உன் அம்மா சரியாவார் என்று சொன்னவுடன் அவர் பிச்சைக்காரனாக மாறிவிடுகிறார். மிகப்பெரிய தொழிலதிபராக இதில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் தீபா.

சிறுவயதிலிருந்தே சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்தவர் தீபா . மார்க்கெட் இழந்த பிறகு அம்மா, அண்ணி வேடங்களில் நடிக்க தொடங்கினார். திருமணத்திற்கு பிறகு குடும்பம் குழந்தை என செட்டில் ஆகிவிட்ட தீபா தற்போது மிகப்பெரிய தொழில தொழில் அதிபராக வளர்ந்துள்ளார். 2020 ஆம் ஆண்டு இவர் லோட்டஸ் லயன் என்ற பெயரில் கம்பெனி ஒன்றை நடத்தி வந்துள்ளார். தற்பொழுது அதில் மிகப்பெரிய தொழில் அதிபராகவும் வளர்ந்துள்ளார்.

இவரது மாடன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வர வருகின்றன பிச்சைக்காரன் படத்தில் நடித்த அம்மாவா இப்படி உள்ளார் என்று ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு உள்ளனர்.
