Saturday, May 17, 2025
-- Advertisement--

லவ் டுடே இவானாவின் இரட்டை சகோதரர் இவரா .!! ஒரே மாதிரியே உள்ளார்களே..?

தமிழ் சினிமாவில் ஜோதிகா நடித்த வித்தியாசமான படம் நாச்சியார். இந்த படத்தை இயக்குனர் சிகரம் பாலா இயக்கினார். இந்த படத்தில் இரண்டாவது கதாநாயகியாக வந்தவர் நடிகை இவ்வானா.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த நடிகை இவ்வானா 2012 ஆம் ஆண்டு மாஸ்டர்ஸ் என்னும் மலையாள படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவருக்கு ஒரு சில பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. தொடர்ந்து சினிமாவில் பயணிக்க வேண்டும் என்பதை இவனாவின் ஆசையாக இருந்துள்ளது.

தமிழில் நாச்சியாரை தொடர்ந்து இவானாவிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குது. அதனைத் தொடர்ந்து கோமாளி படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்த லவ் டுடே படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்த படத்தில் இவரது எதார்த்தமான நடிப்பு மக்கள் மனதை கவர்ந்தது. தற்பொழுது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தொடர்ந்து இவருக்கு லெட்ஸ் கெட் மேரேஜ், கள்வன் என 2 படங்கள் தமிழில் நடித்து வருகிறார்.

இவானா இரட்டை குழந்தையாக பிறந்துள்ளார். இவானாவுடன் உடன் சேர்ந்து ஒரு ஆண் பிள்ளையும் பிறந்துள்ளது. அது இவானாவின் அண்ணன் ஆகும். இப்பொழுது தன் சோசியல் மீடியா பக்கத்தில் தன் உடன்பிறப்புடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நீ தான் என் பிறந்தநாளுக்கு கிடைத்த பெஸ்ட் பரிசு என பதிவிட்டுள்ளார்.

தற்பொழுது இந்த புகைப்படத்தை பார்த்து அச்சு அசல் இவானா ஆண் கெட்டப் போட்டது போலவே உள்ளது என ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles