காஜல் அகர்வால் அக்டோபர் 30-ஆம் தேதி கௌதம் என்ற தொழிலதிபரை திருமணம் செய்யவுள்ளார். இவருடைய திருமண வேலை ஒருபக்கம் பரபரப்பாக நடந்து கொண்டிருக்க மற்றொரு பக்கம் வெப்சீரிஸ் ஒன்று வெளியாக உள்ளது. காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தற்பொழுது வெப் சிரிஸில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
வெப் சீரிஸ் என்ற பெயரில் நடிகைகளை வைத்து கவர்ச்சி காட்சிகளை எடுத்து தனது OTT தளத்தை பின்தொடர்பவர்கள் அதிகம் ஆக்கும் வியாபார யுத்தி கொண்ட இந்த நேரத்தில் காஜல் அகர்வால் வெப்சீரிஸசில் நடிக்கிறார் என்றதும் காஜலை வைத்து ஒரு ஜில்லான வெப்சீரிஸ் எடுக்கப் போகிறார்கள் என்றெல்லாம் செய்தி வந்தது.

காஜல் அகர்வாலுக்கு பேய் வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்ததாம் ஆனால் அதற்கு சரியான கதை அமையாததால் பேய் கதாபாத்திரத்தில் நடிக்க தயங்கினாராம் காஜல் தற்போது வெளியாகவுள்ள வெப் சீரிஸில் பேயாக நடிக்கிறாராம். இந்த வெப்சீரிஸை இயக்கியவர் சென்னை 600028 , மங்காத்தா போன்ற வெற்றி படங்களை கொடுத்த பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு .
காஜலை வைத்து ஒரு ஜில் படம் எடுக்கலாம் என்று நினைத்தவர்கள் மத்தியில் திகில் படம் எடுத்தது பாராட்டக் கூடியது. இன்னும் சில தினங்களில் காஜல் நடித்து வெங்கட்பிரபு இயக்கிய LIVE TELECAST என்ற வெப்சீரிஸ் ஹாட்ஸ்டாரில் வெளியிடப் போகிறார்கள். இதோ அந்த வெப்சீரிஸ் டீசர்.