Wednesday, May 14, 2025
-- Advertisement--

என் முன்னாடி அடிக்கடி ஒருவர் அப்படி நின்று உள்ளார்.!! என் மகளுக்கும் இது போன்று நடந்துள்ளது..! லட்சுமி ராமகிருஷ்ணன் ஓபன் டாக்

பிரபல தொலைக்காட்சியில் ஒரே ஒரு நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாடு எங்கும் புகழ் பெற்றவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் படத் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் நடிகையாகவும் பிரபலமானவர். இவர் சிறு வயதில் தனக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமைகள் குறித்து மனம் திறந்துள்ளார்.

நான் சிறு வயதாக இருக்கும் பொழுது அப்பா வயதில் இருக்கும் ஒரு உறவினர் ஒருவர் அடிக்கடி என் முன்பு தனது அந்தரங்க உறுப்புகளை காட்டியபடி நின்றிருக்கிறார். அதன் அர்த்தம் அந்த வயதில் எனக்கு புரியவில்லை போகப்போக வயது ஆகும் போது அதன் அர்த்தம் எனக்குப் புரிகிறது. இந்த செயல் என் மனதில் ரணம் ஆக மாறியது. இத்தனை நாட்கள் இதை ஏன் என் என் மனதில் இதனை இருட்டு அறை போல் தெரியாமல் மறைத்து வைத்திருந்தேன்.

அந்தக் காலத்தில் மட்டுமல்ல இந்த காலத்திலும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் நடந்து வருகின்றது. ஏன் என் மகளுக்கு கூட இதுபோன்ற கொடுமையான சம்பவம் ஒன்று நடந்தது என் மகள் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது லிப்டில் ஒருவன் தன் பேண்ட்டை அவிழ்த்து காட்டியுள்ளான். அலறியபடி ஓடி வந்தால் என் மகள். இது போன்று எத்தனை பெண்கள் பாலியல் கொடுமைகளை சந்தித்து வருகிறார்கள் என தெரியவில்லை, என மிகுந்த மனவேதனை கூறியுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles