தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. இன்றளவும் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே வைத்துள்ளார். தற்போது சினிமா துறையில் 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை கொண்டாடும் விதமாக பிரம்மாண்டமாக விழா எடுத்து கொண்டாடி உள்ளனர்.

நடிகை மீனா கடந்த 1982 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான “நெஞ்சங்கள்” என்ற படத்தில் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதை தொடர்ந்து பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படத்தில் நடிகை மீனா ரஜினி அங்கிள் என கூறி ரசிகர்கள் மத்தியில் அசத்தியிருந்தார்.

மேலும் நடிகர் ராஜ்கிரனுடன் ‘என் ராசாவின் மனசிலே’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆக என்ட்ரி கொடுத்தார். இந்த திரைப்படம் மாபெரும் ஹிட் கொடுத்தது. தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த மீனா குறுகிய காலத்திலேயே பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் உடன் எஜமான், வீரா, முத்து போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த மூன்று படங்களுமே மாபெரும் ஹிட் கொடுத்தது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா தற்போது 40 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார். அதனை கொண்டாடும் விதமாக விழா ஒன்றை ஏற்பாடு செய்தனர்.

மீனா 40 என்கின்ற பெயரில் தனியார் நிறுவனம் நடத்திய விழாவில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் மீனாவின் ஃபேவரைட் நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அதை தொடர்ந்து 80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ராதிகா, தேவயானி, ரோஜா, சினேகா, சங்கவி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் நடிகர்கள் சரத்குமார், ஜீவா, ராஜ்கிரன் இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், கே. பாக்யராஜ் உட்பட பலரும் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
