பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் கவினிடம் விஷயத்தை கூறவேண்டாம் என கூறியது யார் தெரியுமா..? கவினின் தயாரிப்பாளரே கூறிய தகவல்.. 


நேற்று முன்தினம் பிக்பாஸ் வீட்டில் காதல் நாயகனாகவும், நல்ல திறமையான போட்டியாளராக இருக்கும் கவினின் தாயாருக்கு பணமோசடி தொடர்பாக 5 ஆண்டுகளில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் கவினின் நண்பர்களும், ரசிகர்களும் மன வேதனையில் இருக்கின்றனர். இதனால் இந்த விஷயம் கவினிற்கு தெரிந்தால் கண்டிப்பாக வேதனைபடுவார். பிக்பாஸ்ஸின் விதிகள் போட்டியாளர்களின் சொந்தங்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் உடனே கூறிவிடுவார்களாம். ஆனால் கவின் விஷயம் மிகவும் பிரச்சனையாக இருப்பதால், கண்டிப்பாக பிக்பாஸ் போட்டியாளரான கவினிடம் பிக்பாஸ் கூறிவிடுவார் என்று நினைத்திருந்தனர்.


ஆனால், கவினை வைத்து தயாரித்த ரவீந்தர் சந்திரசேகர் ஒரு பேட்டியில் கூறியதாவது "கவினின் தாய்தான் கவினிடம் இந்த தண்டனையை பற்றின விஷயத்தை கூறவேண்டாம், அப்படி கூறினால் பிக்பாஸ் வீட்டைவிட்டு வந்துவிடுவான், அவன் பிக்பாஸ்ஸில் வென்றுவிட்டு வரட்டும்." என்று கூறியதாக கூறியுள்ளார்.