நள்ளிரவில் தனிமையில் த்ரிஷா ரோட்டு கடையில் எப்படி உடையணிந்து, என்ன வாங்கியுள்ளார் பாருங்களேன்.. 

தென்னிந்தியாவின் கனவு கன்னியாக திகழ்ந்துவருபவர் நடிகை த்ரிஷா. இவர் தமிழில் கடைசியாக நடித்த 96 திரைப்படம் சூப்பர்ஹிட் அடித்தது. த்ரிஷா தற்போது யுனிசெப் நல்லெண்ண தூதராக இருந்து வருகிறார். இதனால் குழந்தைகளின் பாதுகாப்பை பற்றி பல கல்லூரிகளிலும், நிகழ்ச்சிகளிலும் பேசி வருகிறார். அதுமட்டுமல்லாமல் த்ரிஷா தற்போது ராங்கி என்ற படத்திலும் பிசியாக நடித்துவருகிறார். த்ரிஷாவை பொறுத்தவரையில் பொதுவான பிரச்சனைகளுக்கு தைரியமாக குரல்கொடுக்கும் வல்லமை படைத்தவர். 


நேற்று த்ரிஷா ஜக்கி வாசுதேவ் அவர்களை சந்தித்து மரியாதையை நிமித்தமாக பேசினார். இதனிடையே த்ரிஷா நேற்று நள்ளிரவில் இருள் சூழ்ந்த நேரத்தில் தனிமையில் ரோட்டோரத்தில் ஒரு உணவகத்திற்கு வந்துள்ளார். அப்போது குட்டை உடையணிந்து வந்துள்ளார். அந்த உணவகத்தில் இட்லியோ, தோசையோ சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இந்த செயலுக்கு சிலர் கூறுகையில் "த்ரிஷா நள்ளிரவில் ஒரு பெண் தைரியமாக நடந்து செல்ல முடியும் என்று உணர்த்துவதற்காகவே இப்படி செய்துள்ளார்." என்று கூறிவருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.