இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் யார் யாரெல்லாம் வரப்போகிறார்கள் தெரியுமா..? கவினிற்கு அதிர்ச்சி உறுதி... 

பிக்பாஸ் வீட்டிற்கு கஸ்தூரி வெளியேறியதிலிருந்து கடந்த இரண்டு வாரமாகவே யாரும் வெளியேறாததால் சற்று தோய்வாக போனது.
ஆனால் நேற்று நாமினேஷனில் கவின், சாண்டி கண்ணீர் வடித்து அழுததை பார்த்த வனிதா சீறிப்பாய்தது ரசிகர்களின் கண்ணிற்கு குளிர்ச்சியாகவே இருந்தது என்று கூறலாம். அந்த அளவிற்கு நியாயமாக பேசினார் வனிதா. யாரும் இங்கே பாசம் காட்ட வரவில்லை கேம் விளையாட்டுதான் வந்திருக்கிறோம் என்று தெளிவாக பேசினார். 

இதற்கு சேரனும் யாருக்கும் சப்போர்ட் செய்யாமல் விளையாட்டு விதிகள் படி பேசினார். நேற்று வனிதாவை லொஸ்லியா சீண்டினார் என்பது எல்லோருக்கும் நன்றாகவே தெரிந்தது. உண்மையில் கேம் விதிகளை தெளிவாக எப்போது கடைபிடிக்க வேண்டுமோ அப்போது தெளிவாக விளையாடுபவர்கள் யாரென்றால், சாண்டி மற்றும் தர்ஷன் தான். இவர்கள் இருவரும் பேசவேண்டிய இடத்தில் மட்டும் பேசுவார்கள் மத்த நேரத்தில் அமைதியாக இருப்பார்கள் என்று நெட்டீசன்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.


இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்று மூன்று பிக்பாஸ் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வரப்போகிறார்கள். சாக்சி, மோகன் வைத்யா, அபிராமி ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் கெஸ்ட்டாக வரப்போகிறார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. அப்படி சாக்சி வந்தால் கவினிற்கு கண்டிப்பாக பெரிய அதிர்ச்சி காத்திருக்கும். கவின் சாட்சியை எப்படி சந்திக்க போகிறார் என்று இன்று நடைக்கும் பிக்பாஸ் பார்த்தால்தான் தெரியும்.