நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி நான்கு நாட்களில் சாஹோ திரைப்படம் எவ்வளவு வசூலித்துள்ளது தெரியுமா..? அடேங்கப்பா.. 

கடந்த வாரம் உலகம் முழுவதும் 5000 திரையரங்குகளுக்கு மேல் ரிலீசானது பாஹுபலி புகழ் பிரபாஸின் "சாஹோ" திரைப்படம். படத்தை முதல் நாளில் கண்டுகளித்த ரசிகர்களுக்கு இப்படம் பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. படத்தை பல விமர்சகர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சில ரசிகர்கள் படத்தின் இயக்குனரை  சாடினர். பிரபாஸ் சாஹோ படத்தில் நன்றாக நடித்துள்ளார் என்று கூறிவருகின்றனர். இந்நிலையில் வெளியாகி நான்கே நாட்களில் யாரும் எதிர்பார்க்காத விதமாக சாஹோ திரைப்படம் பிரம்மாண்ட வசூல் சாதனை செய்துள்ளது. 


ஆம், நான்கு நாட்களில் உலகளவில் சாஹோ திரைப்படம் 350 கோடி வசூல் செய்துள்ளது. படத்தின் மொத்த பட்ஜெட் 350 கோடி. இதனை நான்கே நாட்களில் வசூல் செய்து அனைத்து விமர்சகர்களின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளது இந்த சாஹோ திரைப்படம். சாஹோ கொஞ்சம் பார்ப்பதற்கு ஸ்வாரசியமாக இருந்தாலும் கண்டிப்பாக இது 1000 கோடியை எளிதில் வசூல் செய்துவிடும் என்று கூறுகின்றனர். சினிமா டிரேடிங் வட்டாரத்தினர்.