இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியது இவர்தான்..! ரசிகர்கள் அதிர்ச்சி..! 

பிக்பாஸ் வீட்டிற்குள் சாக்சி, அபிராமி, மோகன் வைத்யா வந்ததிலிருந்து மேலும் பிரச்சனை பெரிதாக வெடித்தது. இதனால் இன்று வந்த ப்ரோமோவிலும் சாக்சி, லொஸ்லியா இடையே சண்டை நிலவியது. தற்போது இந்த வாரம் யார் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறுவார்கள் என்று அனைவரும் குழப்பத்தில் இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் கவின் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறுவார் என்று எண்ணிய பலருக்கு அதிர்ச்சி என்னவென்றால் வோட் லிஸ்டில் கவினிற்குத்தான் அதிக வோட் விழுந்துள்ளது. 


இந்நிலையில் சேரன் மற்றும் செரினிற்கு வோட் கம்மியாக இருப்பதால் இவர்கள் இருவரில் ஒருவர் வெளியேற வாய்ப்புள்ளதாக கூறிவந்தனர். இந்நிலையில் நமக்கு கிடைத்த தகவலின்படி சேரன் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சேரன் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். செரின் காப்பாற்றப்பட்டுள்ளார். ஆக, சேரனின் பாசம் இந்த வாரத்துடன் நிறைவடையும் என்று கூறப்படுகிறது. நாளை மறுநாள் கமலே இதனை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.