பிக்பாஸ் வீட்டிற்குள் தர்ஷனை சந்திக்க யார் வரப்போகிறார்கள் தெரியுமா..? புகைப்பட ஆதாரத்துடன் இதோ... 


பிக்பாஸ்ஸில் நேற்றிலிருந்து ப்ரீஸ்(Freeze) டாஸ்க் கொடுக்கப்பட்டுவருகிறது. இந்த டாஸ்கின் மூலம் எல்லோரும் ப்ரீஸ்(Freeze) என்று சொன்னவுடன் அப்படியே ஆடாமல் அசையாமல் நிற்கவேண்டும். அப்படி பிக்பாஸ் ப்ரீஸ்(Freeze) என்று சொன்னதும் முதலில் முகேனின் தாய் மற்றும் சகோதரி நேற்று வந்தனர். அனைத்து போட்டியாளர்களும் முகேனின் தாய் மற்றும் தங்கையை பார்த்து பேசி மகிழ்ந்தனர். இந்நிலையில் அடுத்து பிக்பாஸ்ஸில் எந்த போட்டியாளர்களுடைய குடும்ப நபர்களோ அல்லது நண்பர்கள் வட்டாரமோ வரப்போகிறார்கள் என்று அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வேலையில், அடுத்து தர்ஷனின் தாய் மற்றும் அவருடைய தங்கை பிக்பாஸ் வீட்டிற்குள் வரப்போகிறார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.


இதனை உறுதிப்படுத்தும் விதமாக தர்சனின் தாய் மற்றும் தங்கை இந்தியா செல்வதற்காக விமானத்திலிருந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர். இதனை தர்ஷனின் சகோதரி தனது இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் தர்சனின் தாய் மற்றும் தங்கையின் வருகையை காண அனைத்து தர்சன் ரசிகர்களும் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர். இதோ அந்த புகைப்படம்.