திருமணத்திற்கு பின் புடவையில் அசின் வெளியிட்டுள்ள கவர்ச்சி போஸ் ரசிகர்கள் அதிர்ச்சி..! புகைப்படம் உள்ளே..ஜெயம் ரவியுடன் எம்.குமரன் என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை அசின். இவர் சூர்யாவின் நடிப்பில் வெளியான கஜினி படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமடைந்தார். அசின் அதன்பின் விஜய், அஜித் என பல முன்னணி ஹீரோக்களின் படத்திலும் நடித்தார். தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களில் நடித்து வந்த அசினிற்கு மறுபடியும் கஜினி ஹிந்தி ரிமேக் படத்தின் மூலம் பாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஹிந்தியில் கஜினி மெகா ஹிட் அடித்ததும் அசினிற்கு ஹிந்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. அசின் மைக்ரோ மாக்ஸ் நிறுவன தலைவர் ராகுல் சர்மா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன்பின் அசின் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். தற்போது அசினிற்கு அரீன் என்ற மகள் உள்ளார். படங்களில் நடிக்காமல் இருந்த அசின் அடிக்கடி நிகழ்ச்சிகளிலும் தலைகாட்டாமல் இருந்துவருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது அசின் புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று அசின் புடவையில் செம்ம கவர்ச்சியான போஸ் ஒன்றை கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அசினா இப்படி என்று வாயை பிளந்துள்ளனர். இதோ அந்த புகைப்படம்.