சிறை தண்டனை பெற்ற தாய்..! கவினை பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து சந்திக்க போவது இவங்கதானாம்..! 


கடந்த வாரம் பிக்பாஸ் கவினின் தாய்க்கு எதிர்பாராத விதமாக மோசடி வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் பிக்பாஸ் ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த தண்டனை விஷயத்தையும் கவினிடம் தெரியப்படுத்த வேண்டாமென்று கவினின் தாய் கூறிவிட்டாராம். இதனால் தற்போது நடந்து வரும் ப்ரீஸ்(Freeze) டாஸ்கில் கவினின் வீட்டிலிருந்து யார் வரப்போகிறார்கள் என்று பல கேள்விகள் எழுந்து வருகிறது. அந்த வகையில் கவினின் அக்கா மற்றும் கவினின் தந்தை பிக்பாஸ் வீட்டிற்குள் வரப்போகிறார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.


நாளை கவினின் தந்தை மற்றும் அக்கா அவரது குழந்தையுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த டாஸ்கில் எப்படியும் கவின் தனது தாயை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பார். ஆனால் அவருக்கு ஏமாற்றமே.