பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினாரா கவின்..? உண்மையை உடைத்த சாண்டியின் மனைவி.. ஆதாரம் உள்ளே.. 


பிக்பாஸ் ஷோ முடிய இன்னும் மூன்றே வாரங்கள்தான் உள்ளது. தற்போது ஏழு போட்டியாளர்கள் தீயாக விளையாடி வருகின்றனர். எப்படியும் வரும் இரண்டு வாரங்களில் மூன்று போட்டியாளர்கள் வெளியேறுவர். ஆனால் இன்று வெளியான ப்ரோமோவில் சேரன்  சீக்ரட் ரூமிலிருந்து பிக்பாஸ் வீட்டிற்குள் மறுபடியும் நுழைந்து போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியளித்தார். சில போட்டியாளர்கள் மகிழ்ச்சியாக இருப்பது போல நடந்துகொண்டாலும் உள்ளுக்குள் கண்டிப்பாக போட்டி பயம் இருக்கும் என்று கூறப்படுகிறது. 


இந்நிலையில் தற்போது நடந்து கொண்டிருக்கும் ப்ரீஸ்(Freeze) டாஸ்கில் கவினின் தாயார் பிக்பாஸ் வீட்டிற்குள் வரப்போவதில்லை அதற்கு பதில் கவினின் தந்தை அல்லது அக்கா வரப்போகிறார் என்று கூறப்படுகிறது. 


தற்போது இணையத்தில் கவின் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார் என்று செய்திகள் பரவி வருகிறது. அதுமட்டுமல்லாமல் கவின் வெளியேறியதை சாண்டியின் மனைவி உறுதி செய்ததாகவும் செய்திகள் வந்தது. 


இதற்கு சாண்டியின் மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "ஏன்பா பொய்யாக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா..? நான் இன்னும் பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே போகவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்." இதை வைத்து பார்க்கையில் கவின் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறவில்லை என்பது உறுதியாக தெரிந்துள்ளது.