எடப்பாடி பழனிசாமி அவர்களின் உடையை கிண்டல் செய்தவர்களுக்கு சீமான் பதிலடி.! தமிழக முதல்வரை விட்டுக்கொடுக்காமல் ஆதரவு.. 

நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி லண்டன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தில் முதல்வருடன் விஜயபாஸ்கரும் இருந்தார். இதில் புரிந்துணர்வு கலந்தாய்விற்காக எடப்பாடி பழனிசாமி அவர்கள் லண்டனிற்கு சென்றுள்ளதாகவும், அதன்பின் பொருளாதார வளர்ச்சிக்கு அடுத்தடுத்து நல்ல வழிவகைகள், தொழில் மேம்பாடு பற்றி கலந்தாலோசித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சுற்றுப்பயணத்தின் போது எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதன்முறையாக கோட் சூட் அணிந்து கலக்கலாக கலந்தாய்விற்கு வந்துள்ளார். நேற்று தமிழகம் முழுவதும் இந்த புகைப்படத்தை நெட்டீசன்கள் ட்ரெண்ட் செய்தனர். சிலர் கிண்டல் செய்தனர். ஒரு சிலர் இதனை வரவேற்றனர்.

இதற்கு இன்று சீமானிடம் இதைப்பற்றி ஒரு பேட்டியில் கேட்டதற்கு "வேலைவெட்டி இல்லாதவன்தான் இதையெல்லாம் இப்படி கிண்டல் செய்வான், என்னதான் இருந்தாலும் அவர் நம் நாட்டின் முதல்வர். அந்த இடத்தில் குளிர் அதிகமாக இருக்கும் அதனால் அந்த உடை அணிந்திருப்பார். இதையெல்லாமா கலாய்ப்பது." என்று ஆவேசத்துடன் பேசியுள்ளார். என்னதான் அதிமுகவை சீமான் எதிர்த்தாலும். வெளிநாட்டிற்கு சென்ற நம் தமிழக முதல்வரை கிண்டல் செய்தபோது விட்டுக்கொடுக்காமல் பேசுவது எல்லோரிடத்திலும் பெருமையை ஏற்படுத்தியுள்ளது.