வாகன ஓட்டிகளே உஷார்..! இன்றிலிருந்து புதிய சட்டம் அமலுக்கு வருகிறது..! இனி கூடுதல் அபராதம்.. எவ்வளவு தெரியுமா..? 

மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கடந்த மாதம் நிறைவேற்றியது. இதன்மூலம் இன்றிலிருந்து வாகன ஓட்டிகள் தங்களது வாகன உடமைகளை சரியாக எடுத்துக்கொண்டும், சாலைவிதிகளை மதித்து வாகனங்களை ஓட்டவேண்டும். இல்லையென்றால் அபராதம் கூடுதலாக வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.


அந்த அடிப்படையில், உரிமம் இல்லாத வாகனத்தை ஓட்டினால் ரூ.500 ஆக இருந்த கட்டணம் ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படும்.


நிர்ணயிக்கப்பட்ட வேகத்தைவிட அதிகமாக சென்றால், இலகுரக வாகன ஓட்டிகளுக்கு ரூ.1000 , பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு ரூ.4000 வரை வசூலிக்கப்படும்.


அதிவேகமாக ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அதாவது ரேஸ் ஓட்டி பொதுமக்களை அச்சுறுத்தினாலும் கூட, தண்டனை 6 மாதங்கள் முதல் 1 ஆண்டு வரை தண்டனையும், இரண்டாவதுதடவை சிக்கினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.


காப்பீடு(இன்சூரன்ஸ்) இல்லாத வாகனங்களை ஓட்டும் நபர்களுக்கு ரூ.1000 அல்லது 3 மாதங்கள் சிறை, இரண்டாவது தடவை குற்றம் செய்தால் ரூ.4000 அல்லது 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.


சிறார்கள் அதாவது 18 வயதிற்கும் கீழ் உள்ளவர்கள் வாகனங்களை இயக்கி தவறு செய்தால், ரூ.25000 அபராதமும் மற்றும் 3 ஆண்டுகள் வரை சிறை. 

இதனால் நாம் அனைவரும் சாலை விதிகளையும் மோட்டார் வாகன சட்டத்தை மதித்து சரியாக சென்றலாய் நமக்கு எந்த ஒரு பிரச்னையும் வராது. இந்த சட்டம் இன்றிலிருந்து நடைமுறைக்கு வருவதால் வாகன ஓட்டிகள் உஷாராக இருக்க வேண்டும்.