தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார் தமிழிசை சௌந்தராஜன்..இன்று 5 மாநிலங்களில் புதிய ஆளுநர்களை நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் இமாச்சல பிரதேசம், கேரளா, தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கும் புதிய ஆளுநர்களை நியமிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் ஆரிப் முகமது புதிய ஆளுநராக பொறுப்பேற்கிறார். தெலுங்கானாவில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இது அனைவருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


அதுமட்டுமல்லாமல் தமிழசை சௌந்தராஜனின் தமிழக பாஜக தலைவர்  பதிவிக்காலம் இன்னும் சில மாதங்களில் முடிவடைய இருப்பதால் 
தமிழிசைக்கு தெலுங்கானா ஆளுநர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழிசை மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இவ்வளவு காலம் பாஜகவிற்காக உழைத்த தமிழிசைக்கு ஆளுநர் பதிவு கொடுத்தது சரியே என்று நெட்டீசன்கள் பதிவு செய்துவருகின்றனர். இது அவரின் உழைப்பிற்காக கிடைத்த மகுடம் என்றே கூறப்படுகிறது.