கடலுக்கடியில் சர்வர்களை வைத்து இயக்கத்தை சோதனை செய்யும் மைக்ரோசாப்ட் நிறுவனம்.. 

மைக்ரோசாப்ட் நிறுவனம் உலகிலேயே கணினி பயன்பாட்டிற்கு இந்த நிறுவனம் தான் தந்தை என்றே கூறலாம். எந்த ஒரு கணினியும் மைக்ரோசாப்ட் பயன்பாடு இல்லாமல் இயங்காது அந்த அளவிற்கு தன் பயனாளர்களை உலகம் முழுவதும் வைத்துள்ளது. 

இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஸ்காட்லாந்தில் உள்ள ஒர்க்கினாய்ட் தீவில் கடலுக்கு அடியில் வெள்ளை நிற சரக்கு கலவையில் 864 சர்வர்களை அடைத்து அதன் பயன்பாட்டை மற்றும் அதன் செயல் திறனை ஆராய்கிறது. இதன் மூலம் சர்வர்களின் குளிர்விக்கும் தன்மையை கண்டறியலாம் என்றும் 11 மாதங்கள் இதனை டெஸ்ட் செய்து ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்தால். அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம் என்று கூறுகின்றனர்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இச்செயலால் உலகமே ஆச்சிரியத்தில் ஆழ்ந்துள்ளது.