வந்தான், வென்றான் , மக்களின் மனதில் நின்றான்..!! 

சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு புறம் கோப்பையை கைப்பற்றிய மகிழ்ச்சியில் இருக்க ராஷித் கான் இந்தியா மக்கள் தன்னை கொண்டாடுவதை ரசித்தும், பிரம்மித்தும் பொய் இருக்கிறார்.

ஆப்கானித்தானில் சிறிய ஏழை குடும்பத்தில் பிறந்து 19 வயதான ராஷித்கான் தற்போது இந்தியா அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறார் . இந்தியாவிற்கு குடியுரிமை கொடுங்கள் என்று ராஷித் கானை ட்விட்டரில் பிரபலபடுத்தி உள்ளனர். இந்தியாவிடம் கொடுத்துவிடுங்கள் என்றுபல ரஷீத் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

ஆனால் ஆப்கானித்தான் அதிபர் ராஷித் கான் எங்கள் சொத்து என்று திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
ராஷித் கான் அப்ரிடி ரசிகர் அவரைப்போலவே கிராப் வெட்டி கொள்வார். தற்போது அனைவரையும் மிஞ்சும் அளவிற்கு இப்பொது உயர்ந்து நிற்கிறார். இதுபோல் மேன்மேலும் சாதனை படைக்க ரசீதை வாழ்த்துகிறோம்.