வெயிலினால் ஏற்படும் பிரச்சனைகள்..! அதனை தடுக்கும் வழிமுறைகள்..!! 

வெயில்காலம் என்றாலே வெப்பமானது நம்ம உடலில் அளவுக்கு அதிகமான வெப்பதை மட்டும் அதிகாரிக்காமல் வயிற்று வலி , அரிப்பு , பரு, சோர்வு , மயக்கம் என்று பல பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது. 
 


உடல் வெப்பத்தை குறைக்கும் உணவுகளை அதிகமாக பயன்படுத்த வேண்டும். அந்தவகையில் நீர்ச்சத்துள்ள தர்ப்பூசணி நம் உடலில்
உள்ள வெப்பத்தை தனிக்கும். 

 

உடல் வெப்பதை தனிக்கும் ஒரு முக்கியமான பழம்தான் விலாப்பழம்.  இந்த பழத்தில் அதிக குளிர்ச்சி இருக்கிறது. இப்பழம் உடலில் உள்ள வெப்பத்தை தடுக்கிறது. ஆனால் ஒரே நேரத்தில் அதிக அளவு சாப்பிடுவதால் ஒரு சிலருக்கு  காய்ச்சல் இருமல் இந்த மாதிரியான பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் .

இயற்கையான வழியில் உடல் வெப்பத்தை தணிப்பதற்கு புதினா 
மிகவும் உதவியாக இருக்கின்றது  உடல் வெப்பம் அதிகமாக இருந்தால்,  இந்த புதினா ஜுஸையே தினமும் குடித்தால் நல்ல பலனை கொடுக்கும் .

 

முள்ளங்கியில் வைட்டமின் சி, ஆக்சிஜன் மற்றும் அதிகமான நீர்ச்சத்து இருப்பதால். இது உங்கள் உடல் வெப்பத்தை அதிகம் குறைக்க உதவும். 

 

கோடைகாலத்தில் அதிக அளவு எள், உணவில் எடுத்துப்பதால் அதிக அளவு வெப்பம் குறைகிறது, மட்டுமல்லாமல் நீர்ச்சத்தையும் 
அதிகரிக்கும். 

 

உடல் வெப்பத்தை குறைப்பதற்காக  வெயில் காலத்தில் தினமும் இளநீர் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சியாக இருப்பது மட்டுமல்ல ஆரோக்கியமாகவும் இருக்கும் . 

 

வெயில் காலத்தில் தினமும் காலையிம் ஒரு டம்ளர்
மாதுளை  ஜூஸுடன் சேர்த்து  இரண்டு பாதாம் கலந்து குடித்தால் வெப்பம் குறையும் குளிர்ச்சி உண்டாகும் . 


வெயில் காலங்களில் மோர் அதிகஅளவு மோர் எடுத்துக்கொள்ளுங்கள், மோர் குடிப்பதால் உடல் வெப்பம்  குறையும்.


பால் விரும்பி குடிக்கிறவர்கள் தினமும் காலையில் குளிர்ச்சியான பாலுடன் , தேன் சேர்த்து வெறும் வயிற்றுடன் குடித்து வந்தால் உங்கள் உடல் வெப்பத்தை தணிப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும் . 

பிரபலமான ஒரு இயற்கை வைத்தியம் என்றாலே வெந்தயம் தான் தினமும் இந்த வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவந்தால் விரைவாக உடல் வெப்பத்தை குறைக்கும்.