முடி கொட்ட காரணம் என்ன என்று தெரிந்தால் நீங்களே முடிகொட்டாமல் பார்த்துக்கொள்ளலாம். இதோ ஸ்பெஷல் டிப்ஸ் உள்ளே.தலைமுடி உதிர காரணகள்....

இரும்பு சத்து குறைவாக இருந்தால் உடலில் மிகவும் தலைமுடி அதிகமாக கொட்டும். அதிகம் கொட்டினால் இரத்த சோகை இருக்கின்றதா என பரிசோதித்துக் கொள்ளுங்கள். சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள் பொடுகு தலைமுடி கொட்டுவது நிற்றுவிடும். வைட்டமின் சத்து தாது உப்புகள் குறைபாடு இருந்தால். தேவையான அளவு வைட்டமின்களும் தாது உப்புக்களும் இருந்தால் ஆரோக்கியமாய் தெரியும். இந்த சத்துக்கள் குறைவாய் இருந்தாலும் முடி கொட்டும். 

வைட்டமின் ஏ, பி, சி, டி, இ மற்றும் செலினியம் காப்பர் ஸ்னிக் மக்னீசியம் இவை மிகவும் முக்கியமாக இருக்கின்றது. உடலில் சரியாக இருக்கின்றதா என நீங்கள்  சரிபார்த்து கொள்ளுங்கள். ஆரோக்கியமான கொழுப்பு இல்லை என்றால் தலைமுடிகள் பாதிப்பு ஏற்படும். புரதக் குறைபாட்டின் காரணமாக இருந்தால் முடி உதிரும். உணவில் புரதம் சேர்த்தால் இப்பாதிப்பு நீங்கும். நீர் சத்து அதிகமாக இருத்தால் தலைமுடி கொட்டாது. தைராயிடு இருந்தால் முடி அதிகமாக கொட்டும். மன அழுத்தம் மிக முக்கிய  காரணம். குறைவான தூக்கம் முடியினை வெகுவாய் கொட்ட செய்யும். தூக்கம் தான் உடலில் திசுக்களை புதுப்பிக்கும்.தலைமுடி திசுக்களுக்கும் இது பொருத்தும்.

 

தலைமுடி அடர்த்தியாக வளர :


தேவையான அளவு  வெந்தயத்தை எடுத்து அதன் பிறகு தேங்காய் எண்ணெய் உடன் கலந்து கொள்ள வேண்டும். இதை அடுப்பில் வைத்து நன்கு சூடாக்க வேண்டும் இதன் நிறம் சிவப்பு நிறமாக மாறும் வரை சூடாக வேண்டும். இதன் பிறகு சிறிது நேரம் நன்று ஊற வைத்து வெதுவெதுப்பான தண்ணிரில் தலை குளிக்க வேண்டும். இந்த முறையை அடிக்கடி பின்பற்றினால் முடி நன்கு வளர தொடங்கும்.

 

முடி கொட்டுவது சாதாரணமானதுதான். அதுவும் ஒருவருக்கு ஒரு நாளுக்கு 50 முடி கொட்டுவது சாதாரண விஷயம் தான். ஆனால் அதற்கு அதிகமாக கொட்டினால்தான் பிரச்சனை. 

குளிர்காலத்தில் முடி அதிகமாக கொட்ட ஆரம்பிக்கும். அதனால் இந்த காலத்தில் தலைமுடி சரியாய் பராமரிக்கவேண்டியது மிகவும் அவசியம். 

இல்லையென்றால் முடியுடைய அடர்த்தி குறைய ஆரம்பித்துவிடும். அதனால் வழுக்கை தலை ஏற்படுத்தும்.
  

தற்போது பல ஆண்களுக்கு இளமையிலே வழுக்கை ஏற்படுத்திக்கிறது. முடி அதிகமாக கொட்டும்போது ஒரு சில செயல்களை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

முடி கொட்டி அடர்த்தி குறைவாக இருக்குபோதும் என்னென்ன செய்யக்கூடாது .

பெரும்பாலான ஆண்கள் ஓயாமல் தங்களுடைய முடியை சீவிகொண்டே இருப்பார்கள். இப்படி ஓயாமல் சீவுவதனால் முடியுடைய ஆரோக்கியம் பாதிப்படைவதனால் விரைவாக முடி கொட்டி வழுக்கை ஏற்படும். 

அதனால் சீப்பை போட்டு அடிக்கடி தலையை சீவ கூடாது. வேண்டுமென்றால் உங்கள் கைவிரலை கொண்டு தலையை சீவ வேண்டும்.   

தினமும் தலைக்கு ஷாம்பு போட்டு குளிப்பதை முழுமையாக தவிர்க்கவேண்டும். வேண்டுமென்றால் வெறும் நீரில் தலையை அலசவேண்டும்  . 


ஹேர்ஸ்டைலின்போது முடி அதிகமாக கொடிவதால் ஹார்ஸ்டைலின் பொருளட்களான ஜெல் , ஹெர்ஸ்ப்ரே , இதெல்லாம் பயன்படுத்தினால் வழுக்கை இன்னும் நன்றாக தெரியும் .    

அதனால சத்தான உணவை எடுத்துக்கொண்டு முடி வளர்த்து கொள்ள வேண்டும்.