மிஸ்டர் லோக்கல் திரைவிமர்சனம்..!! 

சிவகார்த்திகேயன் என்றாலே தமிழ் மக்களுக்கு பரவலாக தெரிந்த நடிகர். இவர் படம் ரிலீசாகிறது என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பம் குடும்பமாக சென்று ரசிப்பர். அந்த அளவிற்கு தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர். இன்று சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

 

முதல் பாதி : 


எப்போதும்போல துரு துரு பையனாக சிவகார்த்திகேயன் வருகிறார். மிஸ்டர் லோக்கல் என்ற பெயருடன் ஏரியாவில் சுற்றிவரும் இவர் கார் கம்பெனியில் வேலை செய்கிறார். எதிர் பாராத விதமாக தனது அம்மாவான ராதிகாவுடன் பைக்கில் செல்லும்போது நயன்தாராவின் கார் அவர்மீது இடித்துவிட்டு உடனே கதையை ஆரம்பித்து வைக்கிறார் ராஜேஷ். கதை என்ன என்பதை ரசிகர்களே அப்போதே முடிவு செய்துவிட்டனர். முதல் பாதியில் வரும் காமெடி காட்சிகள் ஒர்கவுட் ஆகியுள்ளது. சிவகார்த்திகேயன் நயன்தாராவை காதலிக்க வைக்கும் ட்ரிக் சூப்பர். 


முதல் பாதியை பொறுத்தவரையில் யோகி பாபுவின் காமெடி ஆங்காங்கே சிரிப்பு வரவைத்தாலும் சில நேரங்களில் ஒர்கவுட்டாகவில்லை. 


பாடல்கள் ஒருமுறை கேட்கும் ரகம்.


சிவகார்த்திகேயன் , நயன்தாரா காம்போ அப்படிவொன்றும் செட் ஆனதாக தெரியவில்லை, என்பது போன்று தோன்றுகிறது.


தீம் ம்யூசிக் சுமார்.

 

இரண்டாம் பாதி :

 

எப்படி நயன்தாராவை தனது காதல் வலையில் விழ வைக்கிறார் என்பதே மீதி கதை. அதை எப்படி எடுத்து செல்லவேண்டும் என்பதில் ராஜேஷ் சற்று தடுமாறியிருக்கிறார். ஏனென்றால் சில நேரங்களில் அப்பட்டமாக சிவா மனசுல சக்தி படத்தின் காட்சியை அப்படியே காப்பியடித்திருக்கிறார். நயன்தாராவின் கோவத்தில் அவ்வளவு வழுக்கு இல்லை. ரோபோ ஷங்கரின் காமெடி சற்று ஏமாற்றமே. கிளைமாக்ஸ் அப்படி ஒன்றும் ரசிக்கும்படி அமையவில்லை .

 

படத்தின் மிகப்பெரிய பலமே சிவகார்த்திகேயன் தான். தனி ஆளாக படத்தை தாங்கி நிற்கிறார். 

நயன்தாராவின் நடிப்பு பாராட்டுக்குரியது.

படத்தில் பெரிய அளவில் கதை இல்லை என்றாலும் காமெடி காட்சிகளே படத்திற்கு பலமாக அமைந்துளளது.


படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.

 

ராஜேஷ் அவரது பழைய டெம்ப்லேட்டை மாற்றினால் நல்லது என்பதுபோல தோன்றுகிறது. 

 


மொத்தத்தில் பொதுவான ரசிகர்களுக்கு மிஸ்டர் லோக்கல் ரசிக்கவைக்கவில்லை என்றாலும் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஒருமுறை கண்டிப்பாக பார்க்கலாம்.

 

ரேட்டிங் - 2.5 / 5