நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா திரைவிமர்சனம் !!சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ரியோ நடிப்பில் நேற்று வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படம் எப்படி உள்ளது என்று பார்ப்போம்.

 


முதல் பாதி :

சின்னத்திரையில் கலக்கி வந்த ரியோ தற்போது வெள்ளித்திரையில் தானும் நடிகன் என்பதை நிருபித்துள்ளார். முதல்பாதியில் ரியோ மற்றும் RJ விக்னேஷ் இருவரும் நண்பர்களாக வருகின்றனர். எப்படியாவது யூடியூப் சேனலில் சாதிக்க வேண்டும் என்று சுற்றிதிருந்து வருகின்றனர். அவர்கள் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று அவர்களுக்கு உதவியாக சுட்டி அரவிந்த் தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறார்.

ஹீரோயின் வரும் இடங்கள் சற்று தொய்வாக இருந்தாலும், ஆனால் அவர் வரும் காட்சி மிகவும் குறைவே. முதல் பாதியில் ரியோ RJ விக்னேஷ்  அனைத்து சேனலுக்கு பிரேக்கிங் செய்தியாக மாறுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அதிலிருந்து எப்படி மீண்டு வெளியே வருகிறார்கள் என்பதுதான் இரண்டாம் பாதி. 

முதல் பாதியில் காமெடி ஒர்கவுட் ஆகவில்லை என்றே கூறலாம். ஆர்.ஜே. விக்னேஷின் காமெடி மற்றும் அவர் செய்யும் சேட்டைகள் பிடிக்காத வகையில் உள்ளது. ரியோ தான் ஒரு ஹீரோ என்பதை இந்த படத்தில் ஊர்ஜிதமாக நிருபித்துள்ளார். பின்னணி இசை முதல் பாதியில் கேட்கும் ரகமாகவே உள்ளது.

 

இரண்டாம் பாதி :


முதல் பாதி மக்களை கவரவில்லை என்றாலும் இரண்டாம் பாதியில் க்ளைமாக்ஸ் எல்லோருக்கும் பிடித்த ஒன்றாகவே இருக்கும். சினிமா பிடிக்காதவர்களுக்கு கூட இரண்டாம் பாதியில் வரும் கடைசி 15 நிமிடம் க்ளைமாக்ஸ் கண்டிப்பாக எழுந்து நின்று கைதட்டும் அளவிற்கு இருக்கும் என்றே கூறலாம்.

கொலை சம்பவத்தை தடுக்க முயற்சி செய்யும் இருவர்களின் உயிருக்கு ஆபத்து மற்றும் யார் அந்த கொலைகாரன், அவரின் நோக்கம் என்ன, இந்த கால சமூகம் என்ன செய்தது என்றும் இரண்டாம் பாதியில் மக்களுக்கு தெளிவாக புரியவைத்துள்ளார் இயக்குனர்.

முதல் பாதியில் ரியோராஜ் நடிப்பில் சற்று சுட்டி தனமாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் சீரியசாக ரியோ "ராஜாவாக" மாறுகிறார். எமோஷ்னல் காட்சிகளில் ரியோராஜ் சற்று தடுமாறினாலும் மக்களுக்கு கண்டிப்பாக  அவர் சொல்லுவதை புரியவைத்துள்ளார்.


ராதாரவி நடிப்பில் எதார்த்தம் , நாஞ்சில் சம்பத் எப்போதும் போல கலக்கி உள்ளார். நாஞ்சில் சம்பத் பேசும் ஒரு வசனம் திரையரங்குகளில் மக்கள் அமோக வரவேற்பை கொடுத்தனர். இந்த படம் ஹீரோ ரியோவுக்கு நல்ல ஓப்பனிங்கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டும்மல்லாமல் நம்மை சுற்றி தவறு நடந்தால் அதை தைரியமாக தட்டி கேட்க வேண்டும் என்ற சோசியல்மெசேஜ் படத்தில் உள்ளது. கண்டிப்பாக இப்படத்தில் நிறைய லாஜிக் மீறல்கள் இருக்கிறது என்றே கூறலாம். லாஜிக் மீறல்களை குறைத்தாலே  இன்னும் நன்றாக இருக்கும் என்றே கூறலாம்.

 

மொத்தத்தில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படம் இந்த கால சமூக அக்கறை உள்ள இளைஞர்கள் கண்டிப்பாக குடும்பத்துடன் போய் பார்க்கவேண்டிய ஒரு பொழுது போக்கு திரைப்படம். ஒருமுறை கண்டிப்பாக பார்த்து ரசிக்கலாம்.

 

RATING : 2.75 / 5