நேர்கொண்ட பார்வை திரை விமர்சனம்..!! 

தல அஜித் நடிப்பில் வரும் வியாழன் அன்று ரிலீஸாகவுள்ள "நேர்கொண்ட பார்வை" திரைப்படம் சிங்கப்பூரில் இன்று ரிலீஸாகியுள்ளது. இதில் ஸ்பெஷல் பிரிமியர் காட்சி ஒளிபரப்ப படுவதால் அஜித் ரசிகர்களுக்கு மிகவும் ஒரு சந்தோசம். இதோ நேர்கொண்ட பார்வை படத்தின் திரை விமர்சனம். 


முதல் பாதி :


தல அஜித் குமார் அவர்களுக்கு என்ட்ரி மற்றும் என்ட்ரி BGM இது தான் அவருக்கு பெரிய மாஸ் கொடுக்கும் அவரது ரசிகர்களுக்கும் இது தான் பிடிக்கும் அந்த வகையில் இந்த படத்தில் ஒரு வித்தியாசமான BGM ல் அஜித் என்ட்ரி கொடுக்கிறார். அஜித் வாக்கிங்கில் வரும் இன்ட்ரோ அனைவரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

நடிகை ஷ்ரத்தா கபூர் இந்தி ரீமேக்கில் நடித்த டாப்ஸியையே தூக்கி சாப்பிட்டுவிடுவார் போல, அந்த அளவில் சூப்பராக நடித்துள்ளார். பிக்பாஸ் அபிராமியும் அவரது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அங்கங்கே கொஞ்சம் ஓவர் ஆக்டிங் செய்வது போல் இருந்தது. முதல் பாதியின் கடைசி 15 நிமிடத்தில் சூப்பர் செம்ம மாஸ் சண்டை காட்சி இருக்கிறது.

இது ஒன்றே போதும் தல ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமையும். அந்த அளவிற்கு சண்டை காட்சிகள் நன்றாக வந்துள்ளது. முதல் பாதியை பொறுத்தவரை அஜித் வரும் காட்சிகள் சற்று குறைவே முதல் பாதியில் படத்தின் கதைக்கு மிகவும் முக்கியத்துவத்தை கொடுத்துள்ளார் ஹெச்.வினோத். முதல் பாதியில் வரும் யுவன் சங்கர் ராஜா இசை கண்டிப்பாக ரசிக்க வைக்கிறது. நடிகர்கள் தேர்வு நன்றாக உள்ளதே என்று கூறலாம்.

 

இரண்டாம் பாதி :


இரண்டாம் பாதியை பொறுத்தவரை பிளாஸ்பாக் காட்சிகள் படத்திற்கு மிகவும் தோய்வை ஏற்படுத்திக்கிறது. அஜித், வித்யா பாலன் செய்யும் ரொமான்டிக் காட்சிகள் சிலருக்கு பிடித்தாலும் பலருக்கு பிடிக்காது என்று தோன்றுகிறது. அது அஜித் ரசிகர்களுக்கே பிடிக்காது போல் உள்ளது. பாடல்கள் இரண்டாம் பாதியில் கேட்கும் ரகம் போல் உள்ளது என்றாலும் படத்திற்கு அது செட்டாகவில்லையோ என்று தோன்றுகிறது.


இரண்டாம் பாதியின் மிக பெரிய பிளஸ் கோர்ட் காட்சிகள் பாண்டேவுக்கும், அஜித்திற்கும் நடக்கும் வாக்குவாதங்கள் அடடா கைதட்ட வைக்கிறது. இரண்டாம் பாதியில் படத்தின் மிக பெரிய பலமாக கோர்ட் காட்சிகளே உள்ளன. அதுவும் அஜித் வாதாடும் விதங்கள் வேற லெவெலில் இருக்கிறது. அஜித் ரசிகர்கள் மட்டுமில்லை விஜய் ரசிகர்களுக்கும் இது கண்டிப்பாக பிடிக்கும்.இரண்டாம் பாதியை பொறுத்தவரை பிளாஸ்பாக் காட்சிகளை தவிர்த்து மத்த எல்லா காட்சிகளும் சூப்பராகவுள்ளது.

இரண்டாம் பாதி பெண்கள் சுகந்திரம் பற்றி அஜித் பேசும் வசனம் சூப்பர். 

மொத்தத்தில் நேர்கொண்ட பார்வை அஜித்திற்கு ஒரு மிக பெரிய சூப்பர் ஹிட் திரைப்படம் என்றே கூறலாம். இந்த வருடத்தில் அஜித் இரண்டு வெற்றி படம் கொடுத்துவிட்டார் என்பது உண்மை.                                                                                                                       

குடும்பத்துடன் போய் சந்தோசமாக பார்க்கக்கூடிய திரைப்படம் நேர்கொண்ட பார்வை.


ரேட்டிங் - 3.5 / 5