பூஜா ஹெக்டே தமிழ் சினிமாவிற்கு மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் ஜோடியாக முகமூடி என்ற படத்தில் நடித்திருந்தார் அந்தப் படத்தில் இடம் பெற்ற “வாய மூடி சும்மா இருடா” என்ற பாடல் மிக பிரபலமானது தவிர படம் பெரிய அளவில் பிரபலம் அடையவில்லை.

முகமூடி படத்திற்குப் பிறகு இவருக்கு தமிழ் பட வாய்ப்புகள் வரவே இல்லையாம் அதன்பின் தெலுங்கு சினிமாவிற்கு சென்ற அம்மணி அங்கு அவர் காட்டிய தாராளம் தயாரிப்பாளர்கள் முன்னணி நடிகைகளை புக் செய்தால் அதிக சம்பளம் கொடுக்க வேண்டியது இருக்கிறது பூஜாவை புக் செய்தால் ஓரளவிற்கு பட்ஜெட் பிரச்சனை இருக்காது என்று இவருக்கு வாய்ப்பு கொடுக்க ஆரம்பித்தார்கள்.

அதுமட்டுமல்லாமல் தெலுங்கு படம் என்றால் நிறைய ஆக்ஷன் காட்சிகளும் கொஞ்சம் சென்டிமென்ட் காட்சிகளும் தூக்கலான கிளாமர் காட்சிகளும் இருந்தால் எப்பேர்ப்பட்ட படமாக இருந்தாலும் ஓரளவிற்கு ஓடிவடும் என்ற கணக்கு உள்ளது. பூஜா தாராள கிளாமர் காட்டுவதால் அவருக்கு நிறைய படவாய்ப்புகள் குவிந்தது அதேபோல ஹிந்தி படங்களிலும் நடித்து வந்தார்.

தற்போது பூஜா ஹெக்டே அல்லு அர்ஜுன் நடித்த படத்தின் புட்ட பொம்மா என்ற பாடல் தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழிலும் பெரிய வரவேற்பை பெற்றது. அந்தப் பாடல் மூலம் மீண்டும் பிரபலமான பூஜாவிற்கு நெல்சன் திலீப் குமார் இயக்கும் தளபதியின் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

நடிகை பூஜா சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் வெளியான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
