ரம்யா பாண்டியன் தமிழ் சினிமாவிற்கு ஜோக்கர் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து ஆண் தேவதை படத்தில் சமுத்திரக்கனி அவர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஜோக்கர் ஆண் தேவதை நல்ல கருத்தை கொண்ட படங்கள் என்றாலும் ரம்யா பாண்டியனுக்கு பெரிய பிரபலத்தை கொடுக்கவில்லை.

அதன் பின் ரம்யா பச்சை நிற சேலை ஒன்றை கட்டிக்கொண்டு ஒரு போட்டோ ஷூட் நடத்தி அதனை வெளியிட்டார் அவரது நேரமோ என்னமோ அந்த போட்டோ ஷூட் சமூகவலைதளத்தில் பெரிய வைரலானது. சொல்லப்போனால் அந்த போட்டோ சூட் வெளியான பின் ரம்யாவிற்கு நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வந்ததாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் ஒன்றில் கலந்துகொண்டு பிரபலமானார் ரம்யா விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 4 கலந்துகொண்ட ரம்யா அதன் மூலம் மக்களிடம் பெரிய பிரபலத்தை அடைந்தார்.

தனது சமூக வலைதளபக்கத்தில் கவர்ச்சி உடைகளில் போட்டோ ஷூட் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடையில் எடுத்துள்ள புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.