பிரபல தொலைக்காட்சி விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு என்ற சீரியலில் துணை கதாநாயகியாக அறிமுகமானவர் ஷிவானி. அப்போது அவர் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். அதன்பிறகு இவருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அந்த சீரியலில் உள்ள முன்னணி கதாநாயகிகளை ஓரங்கட்டிய இவர் முக்கிய கதா நாயகியாக மாறினார்.

அந்த சீரியல் முடிவடைந்த பிறகு இவர் அதே தொலைக்காட்சியில் கடைக்குட்டி என்ற சீரியலில் நடிக்க ஒப்பந்தமானார். அப்போது அவருடன் நடித்த நடிகருடன் கிசுகிசுவில் அடிபட்டதால் அந்த சீரியலில் இருந்து விலகினார்.

அதன்பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியின் மிகவும் வித்தியாசமான கதை களம் கொண்ட இரட்டை ரோஜா என்ற சீரியலில் மூலம் மக்களை கவர்ந்து வருகிறார். மிகவும் இளம் வயதிலேயே இவர் நடிக்க வந்து விட்டார். சமீபகாலமாக இவர் குடும்ப பாங்கான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். ஆனால் தற்போது திடீரென மாடர்னாக மாறி மிகவும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படம்
