திரைப்படங்கள் ரிலீஸ் என்றாலே மக்களுக்கு அது பண்டிகை போல தான். அதுவும் அவர்கள் விருப்பமான நடிகர்களின் படங்கள் ரிலீஸ் என்றால் அது ஒரு தீபாவளி போன்ற அனைவரும் கொண்டாடுவர். தமிழ் சினிமாவில் மார்ச் முதல் வாரத்தில் மட்டும் நிறைய படங்கள் ரிலீசாக உள்ளன. அந்த படங்களில் வரிசைகள் பின்வருமாறு…
பஹிரா என்ற படம் வெளிவர உள்ளது. பிரபுதேவா இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளன. இதில் பிரபுதேவா பேயாக இருக்கலாம் என்றும் சில செய்திகள் வெளிவந்துள்ளது.

இதனை அடுத்து அரியவன் என்ற படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தை மித்திரன் ஆர் ஜவகர் இயக்கியுள்ளார். புதுமுகங்களான இஷ்ான் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜேம்ஸ் வசந்த், வித் சங்கர் மற்றும் கிரீன் நாத் ஆகியோர் இசை அமைத்துள்ளனர்.

அடுத்து சசிகுமார் நடிக்கும் அயோத்தி படம் ரிலீஸ் ஆக உள்ளது. சில வருட இடைவெளிக்கு பிறகு சசிகுமார் மீண்டும் ஹீரோவாக இந்த படத்தில் நடித்துள்ளார்.

ஒடிடி ல் சில படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது. இதில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ள படம் ஐஸ்வர்யா நடித்துள்ள தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற படம். மார்ச் மாதம் தொடக்கத்திலேயே இவ்வளவு படங்கள் ரிலீஸ் ஆவதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
