Saturday, May 17, 2025
-- Advertisement--

ஹன்சிகாவின் 51 வது படத்தின் வில்லனாக நடிக்கும் பிக்பாஸ் வெற்றியாளர்…!!! யார் தெரியுமா.

திரைக்கு வந்த 96 ரோமியோ ஜூலியட், கலாபக் காதலன் ஆகிய படங்களை தயாரித்த மெட்ராஸ் ஸ்டுடியோஸ், தற்போது அன்ஷு பிரபாகர் பிலிம்ஸ் உடன் இணைந்து ஹன்சிகா நடிக்கும் 51 வது படமான ‘மேன்’ படத்தை தயாரிக்கிறது.

கலாபக் காதலன் இகோர் இயக்குகிறார். படம் குறித்த அவர் கூறியதாவது ஆண்மை என்பது ஒரு அகங்கார கூறாக மாறிவிட்டது. இது ஒரு போலி அடையாளத்தை உருவாக்கியுள்ளது. மேலும் இது பெண்களை அடக்கி ஆதிக்கம் செலுத்துவது போன்ற ஒரு பிம்பத்தையும் கட்டமைத்துள்ளது.

இந்த இயற்கைக்கு எதிரான ஒரு பெண்களின் கிளர்ச்சி போரை உள்ளடக்கியதே ‘மேன்’ என்ற தலைப்புக்கு காரணம். ஹன்சிகா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். முதல் முறையாக ஆரி அர்ஜுன் வில்லனாக நடிக்கிறார். அவரது அர்ப்பணிப்பு மற்றும் நடிப்பு அசாதாரணமானது.

இத்தகைய எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிக்க நிறைய தைரியம் தேவை. இப்படம் சீட்டின் நுனியில் பார்வையாளர்களை அமர வைக்கும் சைக்காலஜிக்கல் திரில்லர் ஆகும். 96 படத்தின் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார்.

சரண்யா பாக்யராஜ் இக்கதை எழுதியுள்ளார். ஆக்சன் காட்சிகளை நரேன், பிரபு அமைத்துள்ளார். பொன் பார்த்திபன் வசனம் எழுதியுள்ளார் தற்போது இறுதி கட்ட சூட்டிங் நடந்து வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles