தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்து, அதன் பின் சிறிது ஓய்வு எடுத்து, பின்பு பிக் பாஸ் சீசன் 3 மூலம் மக்களிடையே பிரபலம் அடைந்தவர் வனிதா விஜயகுமார். இவர் 2 முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். இவருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில் வனிதா மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளி வந்தன. திருமணத்தின் பொழுது வனிதா பீட்டர் பால் இருவரும் லிப் லாக் செய்தனர். இது மிகவும் சர்ச்சைக்குள்ளான நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் ஒரு முத்தக்காட்சி புகைப்படத்தை வெளியிட்டு இது போன்று முத்தங்கள் தொடரும் எனவும் பதிவிட்டுள்ளார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் மூன்று பிள்ளைகளுக்கு அம்மாவாக இருந்து கொண்டு இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு தவறான முன்னுதாரணமாக இருக்கலாமா.? என்று கேள்வி கேட்டு வருகின்றனர். மறுபுறம் இவருக்கு ஆதரவாகவும் குரல்கள் எழுந்து வருகின்றன.